பல்வேறு அரசியல் நிகழ்ச்சிகளுக்காக நேற்று 26.02.2023 – ஞாயிற்றுக்கிழமை கோவை வருகை புரிந்த பாஜக மாநில தலைவர் திரு கு. அண்ணாமலை அவர்கள் மதியம் 2 மணியளவில் ஒத்தக்கால் மண்டபம் – வேலந்தாவளம் சாலையில் அமைந்துள்ள நமது Thaamarai World School பள்ளிக்கு புரிந்தார்.
பள்ளியின் நிறுவனர் டாக்டர் க.கிருஷ்ணசாமி MD, Ex.MLA அவர்கள் பொன்னாடை போர்த்தி வரவேற்றார்கள்.
திரு.அண்ணாமலை அவர்கள் பள்ளியின் நிறுவனர் அவர்களின் பெற்றோர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.
பள்ளியின் சார்பாக அவருக்கு மதியம் அளிக்கப்பட்ட விருந்தில் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி, இயக்குநர்கள் டாக்டர் சந்திரிகா கிருஷ்ணசாமி, டாக்டர் சங்கீதா ஓம்நாத், டாக்டர் சியாம் ஆகியோருடன் பங்கேற்றார்.
அதன்பின், பள்ளியின் கட்டமைப்பு, வகுப்பறைகள், ஆய்வகங்கள், நவீன விளையாட்டு மைதானங்கள், மாணவர்களால் விளைவிக்கப்பட்ட காய்கறி தோட்டங்கள் ஆகியவற்றைப் பார்வையிட்டார்.
Thaamarai World School பள்ளி வடிவமைப்பு ஐரோப்பியப் பள்ளிகளைப் போன்று அச்சு அசலாக அமைந்து இருப்பதாகவும், அதன் உட்கட்டமைப்பு மற்றும் கற்பித்தல் வசதிகள் 150 ஆண்டுகள் முன்னோக்கி இருப்பதாகவும் வியந்து பாராட்டினார்.
பள்ளிக்கு வருகை புரிந்து, தாங்கள் அளித்த விருந்தில் பங்கேற்றமைக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்களுக்கு பள்ளியின் நிறுவனர் மற்றும் குடும்பத்தினர் நன்றி கூறி வழியனுப்பி வைத்தனர்.
அவர் மாலை 03.40 மணிக்கு பள்ளியிலிருந்து புறப்பட்டு சென்றார்.